2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

முதியவர்களுக்கான கொடுப்பனவுகள்; விசேட நடவடிக்கை

Editorial   / 2020 மார்ச் 23 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வருடம் மார்ச் மாதம் முதியவர்கள், நோயாளர்களுக்கு வழங்கப்படும் ஜீவனோபாய கொடுப்பனவுகளை கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்குவதற்கு உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவின் ஆலோசனைக்கமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த கொடுப்பனவுகளைப் பெறும் முதியவர்கள் தத்தம் பிரதேச கிராம உத்தியோகத்தர்களைத் தொடர்புகொண்டு தமது கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்போது சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறும் கிராம உத்தியோகத்தர்களை சந்திப்பதற்கு முன்னர் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசாங்கம், அந்ததந்த மாகாண சபைகளால் முதியவர்கள், வெவ்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் அலுவலகம் ஊடாகவே இதுவரை நாள்களும் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வந்தாலும்  தற்போதைய நிலையில், அந்த நடவடிக்கையை முன்னெடுப்பதில் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாகவும் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கோவிட் 19 வைரஸால் அதிகமாகப் பாதிக்கப்படுவதாகத் ​தகவல்கள் தெரிவித்துள்ளதால், முதியவர்கள், நோயாளர்கள் ஒரே இடத்தில் ஒன்று சேர்வதைதத் தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .