2025 மே 21, புதன்கிழமை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரணவீர தப்பியோட்டம்

Freelancer   / 2025 மார்ச் 08 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிபத்கொட பகுதியில், அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்திற்கு போலி பத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவைக் கைது செய்ய, களனியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றபோது, ​​அவர் தனது வீட்டை விட்டு ஓடிவிட்டதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு அதிகாரிகள் குழு ஒன்று பிரசன்ன ரணவீரவைக் கைது செய்யச் சென்றிருந்தது.

அந்த நேரத்தில் பிரசன்ன ரணவீரவின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் இருந்ததாகவும், குற்றப் புலனாய்வுத் துறையினர் அவரது மனைவியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்ததாகவும், பின்னர் ரணவீரவின் சாரதியிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

 

அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிக்கு போலியான பத்திரங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் களனி பிராந்திய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.AN

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X