2026 மே 02, சனிக்கிழமை

முன்னாள் எம்.பி அப்துல்லா மஹ்ரூப்புக்கு விளக்கமறியல்

Gavitha   / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான அப்துல்லா மொஹமட் மஹ்ரூப், நாளை (17) வரை  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவருடன் கைது செய்யப்பட்ட மாத்தளையைச் சேர்ந்த பாரூக் மொஹமட் அஸ்லாமும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இருவரையும் கொழும்பு புதுக்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லங்கா சதொச நிறுவனத்தின் வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட இருவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டனர்.

2015 – 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் லங்கா சதொச நிறுவனத்தில் வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .