2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

முழு லொக்டவுன் குறித்து மஹிந்த அதிரடி அறிவிப்பு

Editorial   / 2021 ஏப்ரல் 28 , பி.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமீபத்திய வாரங்களில் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, அதிகரித்துள்ளது. என்றாலும் முழு நாடும் முழுமையாக முடக்கப்படாமல் (லொக்டவுன்) இருப்பதற்கே அரசாங்கம் முடிவு செய்துள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முழுநாட்டையும் முடக்குதல் பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன பாதுகாப்புத்துறை  அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்கேவை (Wei Fenghe) இன்று சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது சீன பாதுகாப்புத்துறை  அமைச்சரின் வருகை குறித்து பாராட்டிய பிரதமர் இலங்கை மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப  சீனாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் இச் சந்திப்பானது  இரு நாடுகளது உறவை மேலும் வலுப்படுத்துமென நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.



 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X