2026 மே 09, சனிக்கிழமை

மூடுவதும் திறப்பதும் ‘கொழும்பு முடிவல்ல’

Editorial   / 2020 டிசெம்பர் 08 , மு.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கான தீர்மானம் கொழும்பில் எடுக்கப்படுவது இல்லை. அந்த முடிவுகள் யாவும் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களால் எடுக்கப்படும் முடிவாகும் எனத் தெரிவித்துள்ள கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நிலைமை விரைவில் சீராகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான வேலுகுமார், கண்டி கல்வி வலயத்தில், கஸ்வத்த ஆரம்ப வித்தியாலயத்தின் கட்டடமொன்று அகற்றப்பட்டுள்ளது. அதனால், அங்கு கல்விப்பயிலும் 160க்கும் மேற்பட்ட மாணர்வகள் பெரும் சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்பது தொடர்பில் கேள்வியெழுப்பியிருந்தார்.

“அந்த கட்டடம் தாழிறங்கும் அபாயத்தில் இருந்தது. அனர்த்தம் ஏற்படுவதற்கான அபாயம் ஏற்பட்டிருந்தது. அதனால்தான் கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் அறிவுறுத்தலின் பேரில், அக்கட்டடம் அகற்றப்பட்டுள்ளது. புதிய கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன” என்றார்.

இதன்போது குறுக்கு கேள்வியை எழுப்பிய எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல, “கண்டி மாநகர எல்லைக்குள் 45 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கெல்லாம், போகம்பர பழைய சிறைச்சாலைக்கு கைதிகள் 800 பேரை கொண்டுவந்ததுதான் காரணமாகும். அந்த கைதிகளில் 180 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்றியிருந்தமையும் நினைவூட்டினார்”

இக்கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜி.எல் பீரிஸ், “ சுகாதார அதிகரிகளின் ஆலோசனைகளின் பிரகாரம், பாடசாலைகளை மூடுவதற்கான தீர்மானம், அதிபர்களால் எடுக்கப்படுகின்றது. அம்முடிவுகள் எவையும் கொழும்பில் எடுக்கப்படுவது இல்லை. அதேபோல, உங்களால் (லக்ஷ்மன் கிரியெல்ல) கூறியதுதான் கண்டி பாடசாலைகளை மூடுவதற்கான காரணமாகும். அந்நிலைமை விரைவில் மாறும் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .