Princiya Dixci / 2021 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா மூன்றாவது அலையில் 19 கர்ப்பிணிகள் மரணித்துள்ளனர் எனவும் இவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டிருக்கவில்லை எனவும் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார்.
எனவே, நாட்டிலுள்ள அனைத்துக் கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தடுப்பூசியை ஏற்றுவதற்கான திகதியை, தாங்கள் வசிக்கும் பகுதிக்குப் பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரிகள் ஊடாக அறிந்துகொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கொரோனா தொற்று தற்போது தீவிரமடைந்து வருவதாகல், கர்ப்பிணிகள், அநாவசியமாக வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனவும் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
35 minute ago
48 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
48 minute ago
59 minute ago
2 hours ago