2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மூன்று நிறுவனங்களை அழைக்க கோப் குழு தீர்மானம்

Editorial   / 2020 பெப்ரவரி 08 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றம் கூடவிருக்கும் இம்மாதம் 18, 19, 20ஆம் திகதிகளில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், தேசிய லொத்தர் சபை , இலங்கை கிரிக்கட் ஆகிய நிறுவனங்களை கோப்  அழைக்கத் தீர்மானித்திருப்பதாக அக்குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில்  நேற்று (07) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர் மேலும் தெரிவிக்கையில், 

 

 

 

ஸ்ரீ லங்கன் எயார் பஸ் கொள்வனவு மோசடி விவகாரம் தொடர்பாக கோப் குழுவில் ஆராய எதிர்பார்த்திருப்பதாகவும்,  இது தொடர்பான அறிக்கைகள் கோப் குழுவின் வசமாக உள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் திறைசேரி முறி தொடர்பில் கோப் குழுவின் விசாரணைகளில் வெளியான விடயங்களே, திறைசேரி முறிகள் விநியோகம் தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தனிக்கை அறிக்கை அறிக்கையிலும் வெளிபட்டுள்ளது என்றார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .