2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மேர்வின் சில்வாவுக்கு பிணை

Freelancer   / 2025 ஜூன் 06 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலம் ஒன்று தொடர்பாக போலி ஆவணங்களை தயாரித்து பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் துறையால் மார்ச் மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தனது வருமானத்திற்கு அப்பால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை பராமரித்ததாக குற்றம் சாட்டப்பட்டு இன்று (6) நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின் நீதிமன்றம் அவரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X