Editorial / 2021 மார்ச் 10 , மு.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிரோஷினி விஜயராஜ்
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவை, இலங்கைக்கு எதிரான ஓர் ஆணைக்குழுவாக இலங்கையர்களுக்குச் சித்திரிக்கப் பார்க்கின்றார்கள் எனக் குற்றஞ்சாட்டிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், மனித உரிமை என்பது தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து இனங்களுக்கும் உரித்தான ஒன்றாகும் என்றார்.
வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் கூற்றில் 21 நாடுகள் இலங்கையை ஆதரித்துப் பேசுவதாகக் கூறப்பட்டிருக்கின்றது. அதில் ஒரு நாடு கூட மேற்கத்தேய நாடு இல்லையெனத் தெரிவித்த அவர், எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் போது, மேற்கத்தேய நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாவிடின், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது.
ஜனநாயகம் இல்லாத நாட்டில், பிள்ளை பெற்றெடுப்பதற்குக் கூட உரிமை இல்லை என்றார்.
பாராளுமன்றத்தில் நேற்று (09) நடைபெற்ற தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபை சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'இன்று இந்தச் சபையில் தேசிய இரத்தினக்கல் ஆபரண சபை சம்பந்தமாகவும் வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் ஒழுங்கு விதிகள் பற்றியும் கலந்துரையாடுகின்றோம். மாணிக்கக் கோபுரம் ஒன்று அமைப்பதாகக் கூறப்படுகின்றது. அது தாமரைக் கோபுரமாக மாறி விடுமோ என்ற சந்தேகம் காணப்படுகின்றது' என்றார்.
இதற்கென மாணிக்கக்கல் கூட்டுத்தாபனத்தால் 348 மில்லியன் ரூபாய் செலவிடப்படுகின்றது. இதை விமான நிலையத்துக்கு அருகில் அமைப்பது நன்றாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது. யாழ்ப்பணத்தில் பனை மரங்கள் காணப்படுகின்றன. பனை உற்பத்திப் பொருட்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஆர்வம் காட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
'இலங்கையில் தற்போதுள்ள பிரதம அமைச்சரே, மனித உரிமைக் குழு பற்றி எமக்கு முதன் முதலாகக் கூறியவர். 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுற்ற போது ஏற்பட்ட மனித உரிமைகள் பற்றிய பிரச்சினைகள் இருக்கின்றன.
அதற்கு மேலதிகமாக வெலிகடை சம்பவம்; அண்மையில் ஏற்பட்ட மகர சிறைச்சாலை சம்பவம், ஜனாஸாக்களை எரித்தல் பற்றிய பிரச்சினை என்பன காணப்படுகின்றன' என்றார்.
இலங்கையில் வசிக்கின்ற குறைந்த வருமானம் பெறுபவர்கள். கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்லக் காரணம், அங்கு மனித உரிமைகள் இருக்கின்றன. மனித உரிமைகளை மதிக்கின்ற நாடுகளாக அவை இருக்கின்றன. மனித உரிமை என்ற விடயம் இல்லாமல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியுமென்று நான் நினைக்கவில்லை. இலங்கைப் பொருளாதாரத்தில் மனித உரிமைகள் பின்னிப்பிணைந்ததொன்றாகக் காணப்படுகின்றது.
'இலங்கைக்கு உதவி வழங்கிய மேற்கத்தேய நாடுகள், 198 களுக்குப் பிறகு உதவிகள் வழங்கவில்லை. எதிர்காலத்தில் மனித உரிமைகளை மதிக்கவில்லை என்றால் புளுP10 போன்ற விடயங்களைக் கூட எங்களுக்கு இழக்க நேரிடும். மனித உரிமைகள் என்ற விடயத்தையும் இங்கு அரசியல் மயமாக்கி இருக்கின்றார்கள்' என்றார். .
வருமானத்தில் இருந்து 680 மில்லியன் குறைந்திருக்கின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக, 2.3 பில்லியன் தேவைப்படுமெனக் முகவரகமொன்று கூறுகின்றது எனத் தெரிவித்த அவர்இ சீனாவுடன் இரு தரப்பு உடன்படிக்கை செய்து 2 பில்லியனைப் பெறுவதற்கு இலங்கையிலிருந்து ஏதாவதோர் இடத்தைக் கொடுக்க வேண்டும்' என்றார்.
ஜனாதிபதி அண்மையில் கலாநிதிப் பட்டம் பெற்றதாகவும்இ இரண்டாவது கலாநிதிப் பட்டத்தையும் பெறப்போவதாகவும் கூறியிருந்தார். உண்மையில் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமென்றால், மனித உரிமைகள் பற்றிக் கற்பதற்குப் பாலர் பாடசாலைக்குத்தான் ஜனாதிபதி முதலில் செல்ல வேண்டும் எனத் தெரிவித்த அவர், ஜனாஸா அடக்கத்துக்கு அனுமதி கொடுப்பதாகக் கூறிவிட்டு, பின்னர் இல்லையென மறுக்கின்றார்.
'மனித உரிமைகளுக்காக இலங்கையின் எல்லா இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதால், மனித உரிமைகள் ஆணைக்குழுவை அரசியல் நோக்கத்தில் பார்க்க வேண்டாம். மனித உரிமைகளை மதிக்கின்ற ஒரு நாடாக நாம் மாற வேண்டும். இலங்கையை, அவுஸ்திரேலியா போன்ற நாடாக நாம் மாற்ற வேண்டும். இந்த நாடு இராணுமயமாக்கலை நோக்கிச் சென்று, மியான்மார் போல சென்றுவிடக் கூடாது என்றே கூறுகின்றேன். நாம் மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.' என்றார்.
9 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
1 hours ago