2026 பெப்ரவரி 16, திங்கட்கிழமை

மேலும் 123 பேருக்கு கொவிட்-19 தொற்று

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 12 , பி.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானதும் மேலும் 123-ஆல் இன்று அதிகரித்துள்ளது.

புதிதாக அடையாளங்காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்கள் அனைவரும் பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய முன்னைய தொற்றாளர்களின் நெருங்கிய தொடர்பாளர்கள் ஆவர்.

அந்தவகையில், குறித்த தொற்றுக்களுடன் மினுவாங்கொட-பேலியகொட கொத்தணி தொற்றுக்களின் எண்ணிக்கையானது 28,502-ஐ எட்டியுள்ளது.

இந்நிலையில், இன்று மட்டும் இலங்கையில் 755 கொவிட்-19 தொற்றுக்கள் பதிவான நிலையில், இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 32,130-ஆக காணப்படுகின்றது.

முன்னதாக, 473 பேர் கொவிட்-19-இலிருந்து குணமடைந்த நிலையில், மொத்தமாக 23,304 பேர் குணமடைந்துள்ளனர். எவ்வாறெனினும், 8,679 பேர் இன்னும் மருத்துவக் கண்காணிப்பிலுள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X