J.A. George / 2021 டிசெம்பர் 27 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணத்தில் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுகின்றனரா என்பது தொடர்பில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையை நேற்று (26) முன்னெடுத்தனர்.
இந்த நடவடிக்கையில் 737 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, 3021 மோட்டார் சைக்கிள் மற்றும் 2493 முச்சக்கரவண்டிகள் சோதனையிடப்பட்டுள்ளதுடன், 7352 பேரும் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில், சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றாத 1749 பேருக்கு பொலிஸரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago