2025 ஜூலை 10, வியாழக்கிழமை

மேல் மாகாணமே அதிக பங்களிப்பை வழங்குகின்றது

Editorial   / 2018 நவம்பர் 05 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கு அதிக பங்களிப்பு செய்யும் மாகாணமாக மேல் மாகாணம் விளங்குவதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2016- 2017ஆம் ஆண்டுகளில் முன் வைக்கப்பட்டுள்ள புள்ளி விபரங்களுக்கமைய, நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கு மேல் மாகாணத்தில் 37.2,  37.8 சதவீதம் பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்தாண்டு மத்திய மாகாணம் 10.7 சதவீதமும், வடமேல் மாகாணம் 10.6 சதவீதமும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக, தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கு மிகவும் குறைந்த பங்களிப்பை வழங்கும் மாகாணங்களாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்கள் விளங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .