J.A. George / 2020 டிசெம்பர் 21 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் இன்று(21) அறிவிக்கவுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றிய விரைவில் பாடசாலைகளை மீள திறப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
நாடு பூராகவும் ஒரே நேரத்தில் பாடசாலைகளை திறப்பது இயலாத காரியம் என்று கூறியுள்ள அவர், பாடசாலைகளை திறக்க கூடிய மாவட்டங்களில், பின்பற்ற வேண்டிய சுகாதார முறைமைகள் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேல் மாகாணத்தில் ஒரே தடவையில் பாடசாலைகளை திறப்பது கடினமான விடயம் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், அது தொடர்பிலான விவரங்கள் அடங்கிய அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிடவுள்ளதாக கல்வியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago