2025 ஜூலை 16, புதன்கிழமை

’மொட்டு 20 வைரஸால் நாட்டுக்கே ஆபத்து’

Editorial   / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலிலிருந்து, நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. எனினும், எமது நாட்டில் மொட்டு - 20 எனும் வைரஸ், நாட்டு மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவிட்டதென, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ்க்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்காமல், பொதுத் தேர்தல் நடத்தப்படுமானால், அது நாட்டு மக்களையே, பலிகொடுக்கும் பலி பூஜைக்கு ஒப்பான செயலாகிவிடுமென்றும் தெரிவித்துள்ளார்.

குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக, அவசர அவசரமாக பொதுத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எடுத்துவரும் முயற்சியாது, மொட்டு-20 வைரஸாகும். அந்த வைரஸ், முழு நாட்டுக்குமே அச்சுறுத்தலாகி ஆபத்தாகிவிடுமென அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பான சூழ்நிலையில் தேர்தல் நடத்தப்படுமாயின் அதுவே, ஜனநாயகத்தின் வெற்றியாகும். எனினும், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தேர்தல் நடத்தப்படுமாயின், அதற்கு தற்போதைய அரசாங்கம் மட்டுமன்றி, ஜனாதிபதியும் பொறுப்புகூறவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகையால், கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டில் சூழ்கொண்டிருக்கின்றன நிலையில், பொதுத் தேர்தலை நடத்துவதற்கு, ஏற்புடைய காலப்பகுதி இதுவல்ல என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .