2025 ஜூலை 16, புதன்கிழமை

மொட்டு பிரதிநிதிகளுக்கு பஷில் எச்சரிக்கை

Editorial   / 2018 ஒக்டோபர் 06 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள், பிரதிநிதிகளின் ஒழுக்காற்று நடவடிக்கைத் தொடர்பில், மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கட்சி நடவடிக்கைகள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் அன்றாட நடவடிக்கைகளின் போதும் மக்கள் பிரதிநிதிகள் சமூக கொள்கைகளை பின்பற்ற வேண்டுமென்பதே பொதுஜன பெரமுனவின் எதிர்பார்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு உறுப்பினராவது கட்சியின் ஒழுக்கத்தை அல்லது நாட்டின் சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டால் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க கட்சி பின் நிற்காது என்றுத் தெரிவித்துள்ள பஷில், தற்போது இவ்வாறான நடவடிக்கைகள் குறித்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு, தான் கட்சியின் பொதுச் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .