Editorial / 2019 ஜூலை 15 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
தடைசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரான மொஹமட் பாருக் பவாஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (15) அவரை பிணையில் விடுவித்துள்ளார்.
38 வயதுடைய மொஹமட் பவாஸ் வாழைத்தோட்ட தொடர்மாடி குடியிருப்பிலுள்ள வீடொன்றில் வைத்து ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார்.
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் சுவரொட்டிகள், அமைப்பின் போதனைகள் அடங்கிய பென்ட்ரைவ், போதனைகளுடனான காணொளிகள் அடங்கிய அலைபேசிகள் என்பன அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து. விளக்கமறியில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மொஹமட் பாருக் பவாஸ், கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.
தற்போது வரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கு அமைய, அவருக்கு பிணை வழங்குவதற்கு தாம் எதிர்ப்பு வெளியிடபோவதில்லை என, சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட கடிதத்தை ஆராய்ந்து பார்த்த பின்னர் இந்த பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தலா ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் மொஹமட் பாருக் பவாஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், அவர் வெளிநாட்டுகளுக்கு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், குறித்த வழக்கினை எதிர்வரும் செப்டெம்பரை் மாதம் 24ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago