Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 செப்டெம்பர் 03 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோடீஸ்வர வர்த்தகர்கள் மற்றும் நலன்விரும்பிகளை வரி வலையில் இருந்து தப்பிப்பதற்கு சுங்க மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் 600க்கும் மேற்பட்டோர் உதவியுள்ளனர் என்று, புலனாய்வுப் பிரிவினால் அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட விசேட புலனாய்வு அறிக்கையின் மூலம் இந்த உண்மைகள் தெரியவந்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், இந்த மோசடி அதிகாரிகள் தொடர்பான மேலதிக விபரங்களை வழங்குமாறு புலனாய்வுத் துறைக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கை சுங்கம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் இடம்பெறும் பல்வேறு ஊழல் மோசடிகள் மற்றும் முறைகேடுகளினால் வருடாந்தம் அறவிடக்கூடிய பத்தாயிரம் கோடிக்கும் அதிகமான வரியை அரசாங்கம் இழந்து வருவதாக விசேட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .