2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மோட்டார் சைக்கிள் சில்லில் சேலை சிக்கியதால் பெண் பலி

Editorial   / 2018 டிசெம்பர் 02 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோட்டார் சைக்கிளில் பயணஞ்செய்த பெண்ணொருவரின் சேலையின் பகுதியானது, குறித்த மோட்டார் சைக்கிளின் சில்லில் சிக்கி விபத்துக்குள்ளானதில்  உயிரிழந்துள்ளார்.

மொரவக்க – நெளும் வீதியில் களுபோவிட்டியன பிரதேசத்துக்கு அருகில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் குறித்த பெண்னை கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டமையை தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிளில் பயணஞ்செய்யும் பொழுது, அப்பெண் அணிந்திருந்த சேலையின் பகுதியானது, மோட்டார் வாகனத்தின் பின் பக்க சில்லில் சிக்கிகொண்டமையால் இவ்விபத்து சம்பவித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .