J.A. George / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
அளுத்கம தர்ஹா நகரில் உள்ள பிரபல பாடசாலையின் மாணவர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, தாக்குதலுக்கு உள்ளான மாணவனுக்கு நெருக்கமான சிலர் பாடசாலை வளாகத்தில் கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
வகுப்பறையில் உள்ள உபகரணங்களுக்கு சேதம் விளைவித்து அதிபரை அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முறைப்பாட்டை அடுத்து, சம்பவம் தொடர்பில் 6 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவனை ஏற்றிய அம்பியுலன்ஸ் வைத்தியசாலைக்குச் செல்வதற்காக பாடசாலையின் கேட்டை திறந்த போது, குறித்த நபர்கள் அத்துமீறி பாடசாலைக்கு நுழைந்துள்ளமை சி.சி.டிவி கமெராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீடியோவை ஆராய்ந்து கலகத்தில் ஈடுப்பட்ட அனைவரையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
13 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago