2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

யுத்தம், பிரிவினை வாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்றிணைக்க வேண்டும்

Gavitha   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

'விடுதலைப் புலிகளை அழித்ததுடன் மட்டும் இராணுவத்தின் பணி நிறைவடையவில்லை. அது மாத்திரம் போதாது. யுத்தத்தாலும் பிரிவினை வாதத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களை, ஒன்றிணைக்க வேண்டும். அதற்கான ஆணையையே ஜனவரி 8ஆம் திகதி மக்கள் வழங்கினார்கள்' என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தியத்தலாவை இராணுவ அக்கடமியில், பயிற்சிகளை முடித்துக்கொண்ட 161 கடட் அதிகாரிகள் வெளியேறும் பிரியாவிடை வைபவமும் அணிவகுப்பு மரியாதையும்; நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இராணுவத்தின் நற்பெயரை பாதுகாத்துத்தான் நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லவேண்டும்.

எதிர்காலத்தை முன்னிட்டு, எதிர்கால யுத்த முறையை நாம் உருவாக்கவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சின் கீழ் விரைவில் முன்னெடுக்கப்படும்.

2025ஆம் ஆண்டில் இலங்கை இராணுவத்தை நவீனமயப்படுத்துவதே நமது இலக்கு. விடுதலை புலிகளை அழித்த யுத்த வெற்றி இராணுவத்துக்கு மாத்திரமே உரியது. அதனை அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்தவேண்டாம்.

நாம் சுதந்திரம் அடைந்த பின்னர் முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க இலங்கை இராணுவத்தை ஆரம்பித்தார். அதில், இலங்கை அதிகாரிகள் உட்பட பிரித்தானிய அதிகாரிகளும் சேவையாற்றினர்.

யுத்தத்தை இறுதி கட்டத்துக்குக் கொண்டு சென்று வழி நடத்திய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாலை மறந்துவிடக் கூடாது.
யுத்தத்தினால் உயிரை அர்ப்பணிப்பது அங்கவீனமடைவது இராணுவத்தினரே. அதனால், அந்தப் புகழை நாம்

இராணுவத்தினருக்கே வழங்கவேண்டும் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன அன்றே கூறினார்.

விடுதலைப் புலிகளை அழித்தது மட்டுமல்லாது, சமாதானததையும் வெற்றிகொள்ளவேண்டும். வடக்கு, கிழக்கில் யுத்தம் நடைபெற்ற பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தெற்கில் உயிரிழந்த மக்கள் இனவாதத்தால் பிரிந்து சென்ற மக்கள் ஆகியோர்களை ஒன்றிணைக்க வேண்டும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X