2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

யானையின் தாக்குதலில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Editorial   / 2025 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அ . அச்சுதன்  

திருகோணமலை மாவட்டம் , சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் சனிக்கிழமை (30) இடம்பெற்றுள்ளது.

தங்க நகர் பகுதியைச் சேர்ந்த இராசேந்திரன் லிங்கரதன் (வயது 58) என்பவரே யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். இரவு வயலுக்கு யானை காவலுக்குச் சென்று காலை வீடு திரும்புகையில் தோட்டம் ஒன்றுக்குள் மறைந்திருந்த யானை தாக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக யானையின் தாக்குதலினால் பலர் உயிரிழந்து வருவதாகவும் காட்டு யானைகள் ஊருக்குள் உள்நுழைவதை கட்டுப்படுத்த முறையான திட்டங்கள் எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X