2025 ஜூலை 31, வியாழக்கிழமை

யுனெஸ்கோவிற்கு புதிய அலுவலர் குழு நியமனம்

R.Tharaniya   / 2025 ஜூலை 30 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்புக்கான (யுனெஸ்கோ) இலங்கை தேசிய ஆணைக்குழுவின் புதிய நிர்வாகக் குழுவிற்கான நியமனம், கௌரவ பிரதமரின் பங்கேற்புடன் ஜூலை 29 அன்று பத்தரமுல்லை, இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் நடைபெற்றது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள், யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதேவேளை, கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக்க கலுவெவ அவர்கள் உப தலைவராக நியமிக்கப்பட்டார்.

கல்வி, அறிவியல், கலாச்சாரம், வெகுஜனத் தொடர்பாடல், சமூகவியல் மற்றும் சுற்றாடல் ஆகிய முக்கிய துறைகளில் யுனெஸ்கோ அமைப்பின் இலக்குகளுக்கு அமைய, தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் தொடர்புடைய அனைத்து அமைச்சகங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்த ஆணைக்குழுவை நிறுவுவதன் முதன்மை நோக்கமாகும்.

புதிதாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உறுப்பினர்களில், துறைசார் நிபுணர்களான கலாநிதி ஆஷா டி வோஸ், திருமதி சந்திரா விக்ரமசிங்க, கலாநிதி டீ. பி. மெதவத்தகெதர, திரு. சுவாமிநாதன் விமல் ஆகியோருடன்,

யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவின் செயலாளர் நாயகம் பேராசிரியர் பிரபாத் ஜயசிங்க மற்றும் கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் திருமதி நதீகா ரத்நாயக்க ஆகியோரும் அடங்குவர்.

மேலும், நியமிக்கப்பட்ட மற்றைய உறுப்பினர்களாக திரு. ஹேமந்த புபுதுசிறி, திருமதி சசிகலா பிரேமவர்தன, திருமதி சமந்தி சேனநாயக, செல்வி அப்சரா கல்தேரா, திரு. மொஹமட் நவாஸ், திரு. ஆர்.ஏ.டி.எஸ். ரணதுங்க, திரு. டபிள்யூ.ஜி. குமாரகம, திரு. சுஜீவ பல்லியகுருகே, திருமதி தீபா லியனகே, திரு. எச்.ஏ.எச். பெரேரா, திரு. எஸ்.எஸ்.பி. டி அல்விஸ், திரு. வருண ஸ்ரீ தனபால, திரு. டபிள்யூ.டபிள்யூ.எம்.பி.எஸ்.சி. பளம்கும்புர, திரு. எம்.எஸ்.எல்.ஆர்.பி. மாரசிங்க, கலாநிதி நிலான் குரே மற்றும் செல்வி சனுஜா கஸ்தூரியாரச்சி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .