2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

யாழில் கடவுச்சீட்டு பிராந்திய அலுவலகம் திறப்பு

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 01 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திங்கட்கிழமை (01) அன்று திறந்து வைக்கப்பட்டது. 

யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இவ் அலுவலகம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.  இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கௌரவ ஆனந்தவிஜேபால ,கடற்றொழில் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் ,வடக்கு மாகாண ஆளுநர்கௌரவநாகலிங்கம் வேதநாயகன் ,பிரதியமைச்சர்களான சுனில்வட்டகல.   நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா,ஜெ.றஜீவன், மற்றும் சிவிகே சிவஞானம் அமைச்சின் செயலாளர்கள், பிரதமசெயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்ஐ.சமிந்த பத்திராஜ ,யாழ்மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் , பிரதியமைச்சர்கள் ,யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் அரசஅதிகாரிகள் கலந்து கொண்டனர்.யாழ்மாவட்டச் செயலகத்தின் 60 ஆவதுஆண்டுபூர்த்தியை முன்னிட்டு முத்திரையும் தபால்தலையும் வெளியிடப்பட்டது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X