2026 மே 14, வியாழக்கிழமை

யாழில் இராணுவம் துப்பாக்கிச் சூடு

Editorial   / 2021 ஏப்ரல் 22 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

 கொடிகாமம் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தின் மீது இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். 

கொடிகாமம் பாலாவி காட்டுப்பகுதியில் இராணுவத்தினர் நேற்று (21) மாலை 6.30 மணியளவில் சுற்று  காவல் பணியில் (ரோந்து) ஈடுபட்டிருந்த போது சட்டவிரோத மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை நிறுத்தியுள்ளனர்.

எனினும், இராணுவத்தினரின் கட்டளையை மீறி உழவு இயந்திரம்  தப்பிச் செல்ல முற்பட்டது. வாகனத்தின் ரயர்களை இலக்கு வைத்து இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டினால் ரயர் காற்று போக உழவு இயந்திரத்தில் பயணித்த மூவர் வாகனத்தை கைவிட்டு காட்டுக்குள் பாய்ந்து தப்பி சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் கொடிகாம  பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் உழவு இயந்திரத்தை மீட்டதுடன் , தப்பி சென்ற மூவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .