R.Tharaniya / 2025 நவம்பர் 04 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் பஸ்ஸுக்காகக் காத்திருந்த இராணுவப் பெண் சிப்பாய் ஒருவரின் கைப்பையைத் திருடிய சந்தேகநபரை ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பஸ்ஸுக்காகப் பெண் சிப்பாய் காத்திருந்த வேளை அவரது கைப்பையைத் திருடிக்கொண்டு சந்தேகநபர் தப்பியோடியுள்ளார்.
கைப்பையினுள் ஒரு பவுண் நகை, பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் காணப்பட்ட நிலையில், அது தொடர்பில் அந்தப் பெண் சிப்பாய் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்படு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகநபர் கொடிகாமம் பகுதியில் பதுங்கியிருக்கின்றார் என்று கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸ் குழு சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரைக் கைது செய்த வேளை அவரது உடைமையில் இருந்து ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
36 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
51 minute ago