Editorial / 2026 ஜனவரி 18 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் ஊர்காவற்துறை பொலிஸாரினால் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலணை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் என பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள போதை வியாபரிகளிடமிருந்து போதைப்பொருளை வாங்குபவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இருவரது உடைமையில் இருந்தும் 2கிராம் 350 மில்லி கிராம் ஹெரோயின் , 12 கிராம் ஐஸ் போதைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , தமக்கு நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த போதை வியாபாரி ஒருவரே போதைப்பொருளை விநியோகிப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து குறித்த போதை வியாபாரியை கைது செய்த பொலிஸார் போதைப்பொருளை வாங்குபவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
6 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
18 Jan 2026