2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ராகுல் காந்தி கைது

Freelancer   / 2025 ஓகஸ்ட் 11 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். 

மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து, கடந்த வாரம் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரிய ஆதாரங்களுடன் தகவலை வெளியிட்டிருந்தார். 

பாஜக அரசுடன் சேர்ந்துகொண்டு தேர்தல் ஆணைக்குழு வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றச்சாட்டுகள் முன்வைத்தார். 

இந்த நிலையில் இன்று காலை ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணைக்குழு நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டனர். 

இதன்போது காவல்துறையினரின் அறிவுறுத்தலை ஏற்காத காரணத்தினால் ராகுல் காந்தி உட்பட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .