2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ரங்கலவில் மாயமான நால்வரும் மீட்பு

Thipaan   / 2015 செப்டெம்பர் 23 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, ரங்கல- நக்கிள்ஸ் மலைத்தொடரிலுள்ள, கோணவெல நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்காக சென்று மாயமான நால்வரும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 காணாமல் போனதாகக் கூறப்படும் நால்வரையும் மீட்பதற்காக, இரண்டு பொலிஸ் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ரங்கல வன்வாரி பிரதேசத்தைச் சேர்ந்த 36, 34 வயதுடைய நபர்களும்  18, 24 வயதுடைய இளைஞர்களும் கோணவெல நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்காக ஞாயிற்றுக்கிழமை(20) சென்று காணாமல் போயிருந்தனர்.

இவர்களில் ஒருவர் தனது மனைவிக்கு திங்கட்கிழமை(21) இரவு அலைபேசியில் அழைப்பை ஏற்டுத்தி தாம் , காட்டுக்குள் வழிதவறிவிட்டதாக தெரிவித்துள்ளார். கணவனின் அலைபேசிக்கு மீளவும் அழைப்பை ஏற்படுத்தியபோதும் அதுசெயலிழந்துள்ளதுள்ளது. இதன்பின்னரே இவ்விடயம் தொடர்பில் மேற்படி நபர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு சம்பவம் தொடர்பில்  பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து பொலிஸாரினால் நியமிக்கப்பட்ட இரண்டு குழுகளினால் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X