2025 ஜூலை 10, வியாழக்கிழமை

ரங்கே பண்டாரவின் தகவல் குறித்து விசாரணையைக் கோரும் நாமல் ராஜபக்ஸ

Editorial   / 2018 நவம்பர் 04 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார வெளியிட்டுள்ள தகவல் தொடர்பில் விசாரணைகள் அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தன்னை கட்சி மாறுமாறுக் கோரி, 2.8 டொலர் மில்லியன்  வழங்குவதாக அரசாங்க தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ். பி. திசாநாயக்க அலைபேசி மூலம் அழைப்ப விடுத்ததாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ள கருத்தானது மிகவும் பாரதூரமானதெனவும், இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாதென்றும், பாலித ரங்கே பண்டாரவின் கருத்து உண்​மையெனில்,  அது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது அவசியம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தனது உத்தயோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே நாமல் இந்த கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .