2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ரஞ்சன் பிணையில் விடுதலை; வெளிநாடு செல்ல தடை

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைதுசெய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கங்கொடவில நீதவான் நீதிமன்றில் இன்று (05) ஆஜர் செய்யப்பட்ட போது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலா ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன்,  ரஞ்சன் ராமநாயக்க வெளிநாடு செல்வதற்கு கங்கொடவில நீதவான் எச்.யு.கே. பெல்பொல, தடை விதித்துள்ளார்.

மாதிவெலயில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து  நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று (04) இரவு கைதுசெய்யப்பட்டிருந்தார்.

நீதிமன்ற உத்தரவின்படி ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டுக்கு நேற்று (04) பிற்பகல் சென்ற பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, அனுமதிப்பத்திரம் காலாவதியாகியிருந்த நிலையில் பிஸ்டல் ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், அனுமதிப்பத்திரம் காலாவதியான பிஸ்டல் ஒன்றை வைத்திருந்தமைக்காக அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .