2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ரணிலின் உடல்நிலையை சொன்னவர் இடைநீக்கம்

Editorial   / 2025 டிசெம்பர் 19 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனவின் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கடிதத் தலைப்பின் கீழ் இது தொடர்பான கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், பொறுப்பு வாய்ந்த பதவியை வகிக்கும் அரச வைத்திய அதிகாரி என்ற ரீதியில், பல்வேறு ஊடகங்கள் வாயிலாக நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும் பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையிலும் அனுமதியின்றி ஊடகங்களுக்குக் கருத்துக்களை வெளியிட்டமைக்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,  கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு ரணிலின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு கூறியதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனவினுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X