2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ரணிலின் கூட்டத்தில் ரவையுடன் இளைஞன் கைது

Janu   / 2024 செப்டெம்பர் 08 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பில்,  ஜனாதிபதி ரணில் கலந்து கொண்ட  தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ரி 56 ரக துப்பாக்கி ரவை உடன் சென்ற இளைஞன் ஒருவரை ஜனாதிபதி பாதுகாப்பு படையினர் ஞாயிற்றுக்கிழமை (08) கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் கோரகளிமடு பிரதேசத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு  வருகை தருபவர்களை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் சோதனையிட்டு அனுப்பிக் கொண்டிருந்தனர்.

இதன் போது கூட்டத்திற்கு சென்ற இளைஞன் ஒருவரை சோதனையிடும் போது அவரின் உடமையிலிருந்து  ரி 56 ரக துப்பாக்கி ரவை ஒன்றை கண்டுபிடித்து மீட்டதையடுத்து அவரை கைது செய்தனர்

இதில் கைது செய்யப்பட்டவர் வாகரை வம்மிவெட்டுவான் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய கடற்தொழில் ஈடுபட்டு வருபவர் எனவும் இவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி போலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

 கனகராசா சரவணன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X