2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ரணிலின் தெரிவு நவீன், சஜித்தின் விருப்பம் ரஞ்சித்; நாளை தெரியும்!

Editorial   / 2020 பெப்ரவரி 05 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தலை இலக்கு வைத்து கட்டியெழுப்பவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணியின் பொதுச்செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பெயரிட்டுள்ளார்.

எனினும், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அணியினரின் விருப்பத்துக்குரிய தெரிவாக நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்கவே உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த விடயம் தொடர்பில் நாளை (06) கூடவுள்ள கட்சியின் செயற்குழுவிலேயே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும், தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கட்சியின் தலைவர்கள் இன்று (05) கலந்துரையாடவுள்ளதுடன், எந்தவிதமான தீர்மானத்துக்கு வருவது என்பது தொடர்பில் ஆராயவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கூட்டணியின் பொதுச்செயலாளர் பதவிக்கு ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க செயற்குழு இணங்காவிட்டால், அங்கு பிரச்சினைக்குரிய நிலையொன்றும் தோன்றலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .