Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2025 மார்ச் 16 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்துப் பேசுவதற்கு இப்போது மிகவும் தாமதமாகிவிட்டதாகக் கூறிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று இன்று தெரிவித்தார்.
வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ததாகவும், ஏப்ரல் 10 மற்றும் மே மாதங்களில் இரண்டு நாள் விவாதத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
"இந்த விவகாரம் தொடர்பாக ஒரு குழுவை நியமிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அறிக்கையை நாங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் அனுப்புவோம்," என்று அவர் கூறினார்.
விவாதத்தை நடத்துவதற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி குழுவும் வாதிட்டதாகவும் இருப்பினும் விவாதத்திற்கான திகதியை அரசாங்கத்தால் ஒதுக்க முடிந்தது என்றும் அவர் கூறினார்.
"நாட்டில் ஜனநாயகம் மற்றும் நீதிக்காக நாங்கள் விவாதம் நடத்துவோம். மக்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார்.
பட்டாலந்த சம்பவம் குறித்து முழு விபரமும் அறிந்தவர் முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்க என்றும், சமீபத்திய நேர்காணலின் போது அல் ஜசீரா அதைப் பற்றிக் கூறும் வரை அவர் அதைப் பற்றி ஒருபோதும் பேசவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.
"அது இன்று இல்லை. கடந்த 35 ஆண்டுகளில் ணில் இதைப் பற்றிப் பேசியிருக்கலாம். அல் ஜசீரா அதைப் பற்றிப் பேசும் வரை அவர் எதுவும் சொல்லவில்லை. ரணில் இப்போது மிகவும் தாமதமடைந்து விட்டார் என்று அவர் கூறினார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago