2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ரணில் இரத்து செய்வார் என நம்புகிறேன்

Nirosh   / 2022 செப்டெம்பர் 26 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுப்பார் என தான் நம்புவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி தெரிவித்துள்ளார்.

இச்சட்டத்தின் ஊடாக மலையக சமூகமும் கூட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்ததாகவும், எனவே இந்த மாற்றத்தின் அவசியத்தைத் தானும் வலியுறுத்துவதாகவும் ஜீவன் டுவிட் செய்துள்ளதோடு, தேசியப் பாதுகாப்பு முக்கியம் என்றாலும், பயங்கரவாதத் தடைச் சட்டம் காலாவதியாகியுள்ளதோடு, கொண்டுவரப்பட்ட நோக்கத்தை மீறி இச்சட்டம் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றஞ்சுமத்தினார். 

நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்துக்கான முதல்படி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வது. எனவே ஜனாதிபதி இச்சட்டத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X