2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

ரணில் கைது: இந்திய எம்.பி கடும் அறிவுறுத்தல்

Editorial   / 2025 ஓகஸ்ட் 24 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

“பழிவாங்கும் அரசியலை கைவிட வேண்டும்”என இலங்கை முன்னாள்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே கைதுக்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,   அரசு நிதி முறைகேடு வழக்கில், கைது செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவரது கைதுக்கு, காங்கிரஸ் எம்பி சசி தரூர் கவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவதுஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, மேலோட்டமாகப் பார்த்தால், அற்பமான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்திருப்பது குறித்து கவலை கொள்கிறேன்.

உடல்நலப் பிரச்னைகள் காரணமாக அவர் ஏற்கனவே சிறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார். இது அவர்களின் உள் விவகாரம் என்பதை முழுமையாக மதிக்கும் அதே வேளையில், பழிவாங்கும் அரசியலை இலங்கை அரசு கைவிட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல தசாப்தங்களாக தேசத்திற்குச் சேவை செய்துள்ளார். அவர் மரியாதை மற்றும் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சசி தரூர் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .