Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜூன் 06 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றத்தில் நேற்று(05) இடம்பெற்ற பிரதிச் சபாநாயகர் தெரிவின் போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது.
இந்த விவகாரம் தொடர்பில், இருவரும் மாறி, மாறி தர்க்கத்தில் ஈடுபட்டனர். “ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் வசம் இருந்த பிரதி சபாநாயகர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. எனவே நாமே மாற்று நபரை நியமிக்க வேண்டும்” என்றார்.
இதன்போது கருத்துரைத்த ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியான தினேஷ் குணவர்தன, “எமது தரப்பில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேவின் பெயரை நாம் பரிந்துரைத்துள்ளோம். அவருக்கு ஆதரவளிக்கவேண்டும். இது வரலாற்று சந்தர்ப்பமாகும்” என்றார்.
“பிரதி சபாநாயகர் தெரிவில் இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு முக்கிய அம்சமான விடயத்தை இன்று எம்மால் செய்ய முடியும்.பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதி சபாநாயகராக இதற்கு முன்னர் கடமையாற்றிய வரலாறு இருந்ததில்லை. எனவே இம்முறை அவ்வாறான ஒரு தீர்மானம் எடுத்து வரலாற்றில் பதிய முடியும்.
“ஆகவே, சபையின் சகல உறுப்பினர்களும் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேவுக்கு வாக்களித்து அவரை பிரதி சபாநாயகராக தெரிவு செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன், “தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின்னர் சபையை வழிநடத்தும் விதத்தில் சபாநாயகர், ஐக்கிய தேசியக் கட்சியிலும், பிரதி சபாநாயகர் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலும், குழுக்களின் பிரதித் தலைவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து நியமிக்கப்படுவது என்ற இணக்கப்பாடு அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது” என்றார்.
“ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் வசமிருந்த பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடமாகியுள்ள நிலையில் அவர்களின் ஒருவரை நியமிக்கின்றமையே முறையானது. அவ்வாறு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சார்பில் ஒருவரை நியமிக்கும் பட்சத்தில் நாம் அதற்கு பூரண ஆதரவை வழங்கத் தயாராக உள்ளோம்” எனக் குறிப்பிட்டார்.
குறிக்கிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “தேசிய அரசாங்கமாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நபர்கள் பிரதி சபாநாயகராக ஒருவரை தெரிவதும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் சபாநாயகரை தெரிவு செய்வது என்ற இணக்கப்பாடு இருந்ததை மறுக்கவில்லை. ஆனால் இந்த இரண்டு பதவிகளும் அரசாங்கத்தின் சார்பில் நியமிக்கப்பட வேண்டிய பதவிகள்” என்றார்.
“பிரதி சபாநாயகர் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சார்பில் இருந்தாலும் கூட அவர்களும் ஆளும் கட்சியாக இருந்தனர். எனினும் இப்போது அவர்கள் எதிர்க் கட்சியில் அமர்ந்துகொண்டு மீண்டும் பிரதிச் சபாநாயகர் பதவி தமக்கு வேண்டும் என கோருவது நியாயமற்ற காரணியாகும்” என்றும் குறிப்பிட்டார்.
பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தலைவர் ஆகிய இரண்டு பதவிகளை எதிர்க்கட்சியினருக்கு வழங்க முடியாது என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,அரசாங்க தரப்பில் இருந்து ஒருவரை நியமிக்க வேண்டும். இதில் வேறு வழிமுறைகள் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டார்.
பிரதமரின் இந்தக் கருத்துக்கு எதிர் கருத்து கூறிய எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன், “பிரதமர் கூறும் கருத்துகள் ஏற்றுகொள்ளக்கூடியதாக இல்லை, சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுகையில் பிரதி சபாநாயகர் குறித்தும் தெரிவித்திருந்தார்” என்றார்.
“பின்னர் அவர் மனங்களில் வேறு எண்ணங்கள் எழுந்துள்ளன. இவ்வாறு மாற்றம் பெற முடியாது. நியாயமாக பிரதி சபாநாயகர் பதவி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்த இரா. சம்பந்தன், அதுவே தேசிய அரசாங்கத்தின் இணக்கப்பாடு. அதுவே சரியானது என நாம் கருதுகின்றோம், எனவே பிரதி சபாநாயகர் பதவியை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இரண்டு பொறுப்புகளை எதிர்க்கட்சிக்கு வழங்குவது அடிப்படையற்ற காரணியாகும். இணக்கப்பாடு என்னவாக இருந்தாலும் இப்போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சார்பில் நியமித்துள்ள நபர்கள் எதிர்க்கட்சி ஆசனத்தில் உள்ளனர். ஆகவே எக்காரணியைக் கொண்டும் அவர்களுக்கு வழங்க முடியாது. மேலும் அரசாங்கத்தின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள நபர்களில் அனுபவம் மிக்க, நடைமுறைகள் தெரிந்த ஒருவரை நியமித்துள்ளனர். ஆகவே அவரை நியமிப்பதே எமக்குள்ள ஒரே தெரிவாகும். இதில் தர்க்கிக்க முடியாது என குறிப்பிட்டார்.
இதன் பின்னர் இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கு கொள்ளாது வெளிநடப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
2 hours ago
11 May 2025