2026 மே 11, திங்கட்கிழமை

dd

ரத்துபஸ்வல விவகாரம்; 3 நீதியரசர்களடங்கிய கு​ழாமை நியமிக்கும்படி கோரிக்கை

Editorial   / 2019 ஜூலை 10 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

அத்துடன் கம்பஹா மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதியரசர்கள் அடங்கிய விஷேட நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறும் அவர்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குடிநீரில் விஷத் திரவியங்கள் கலப்பதாக கூறி கடந்த 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு இராணுவத்தார் வரவழைக்கப்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .