George / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்
பதுளை மாவட்டத்துக்கு உட்பட்ட சுகாதார திணைக்களத்துக்கு வழங்குவதற்காக, கடந்த ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி அனுப்பப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் 25 டொன் நிறையுடைய திரிபோஷா அடங்கிய பொதிகள், கொட்டக்கலை ரயில் நிலையத்தில் தரித்திருந்த ரயிலிலிருந்து, கைப்பற்றப்பட்டுள்ளன.
பெருட்களை ஏற்றிச் செல்லும் ரயிலின் பெட்டிகளிலிருந்தே, இவை மீட்கப்பட்டதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் இராஜகிரிய திரிபோஷ தயாரிப்பு தொழிற்சாலையால் தயாரிக்கப்பட்ட மேற்படி திரிபோஷா அடங்கிய பொதிகள், பதுளை மாவட்ட சுகாதார திணைக்களத்துக்கு வழங்குவதற்காக, கடந்த ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி, கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்ட பதுளை ரயிலில் போடப்பட்டுள்ளது.
குறித்த பொதிகளை ஏற்றிச் சென்ற ரயிலானது, ரயில் எஞ்சின் இல்லாமையால் பயணிக்க முடியாது, இரண்டு வாரங்களுக்கும் மேலாக கொட்டக்கலை ரயில் நிலையத்துக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்கள ஊழியர்கள் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இவற்றை உடனடியாக, பதளை சுகாதார திணைக்களத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்காள்வதாக, கொட்டகலை ரயில் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago