2025 ஒக்டோபர் 18, சனிக்கிழமை

ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து பெண் உயிரிழப்பு

Freelancer   / 2025 ஒக்டோபர் 17 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். சாவகச்சேரியில் ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட குடும்பப் பெண் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்

நேற்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ரயில், சாவகச்சேரி - சங்கத்தானையை அடைந்ததும் மேற்படி பெண் ரயிலில் இருந்து இறங்க முற்பட்டுள்ளார்.

இருப்பினும் அவர் இருந்த பெட்டியின் வாயில் ஊடாக இறங்குவதற்கு இறங்கு தளம் இல்லாத காரணத்தால் வேறு பெட்டி ஊடாகச் சென்று இறங்க முற்பட்ட வேளையில் ரயிலும் நகர்ந்ததால் பெண் கீழே வீழ்ந்து படுகாயமடைந்திருந்தார்.

அவர் உடனடியாகச் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
 
சாவகச்சேரி கோவிற்குடியிருப்பைச் சேர்ந்த 53வயதான சு.சுபாசினி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .