Editorial / 2019 ஜூலை 20 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி - அறிவியல்நகர் பகுதியில், நேற்று இரவு 8.50 மணியளவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் ரயிலுடன் மோதுண்டே, குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இளைஞர்கள் இருவரும், விபத்து இடம்பெற்ற பகுதியான தமது வீட்டுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் அமர்ந்திருந்து சம்பாசித்துக்கொண்டிருந்ததாகவும், புகையிரதம் வருவதை அவதானிக்காமையாலேயே குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் முல்லைத்தீவு - முறிகண்டி செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் எனவும் மற்றயவர் தொடர்பில் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
18 minute ago
38 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
38 minute ago
45 minute ago
2 hours ago