2026 மே 09, சனிக்கிழமை

dd

ரயில் நிலையத்தில் ‘தேசிய மொழிகள்’ மாயம்

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 08 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிஸ்ஸ ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள அறிவித்தல் பலகையொன்றில் இலங்கையின் தேசிய மொழிகளான தமிழ், சிங்களம் என்பன மறக்கப்பட்டு ஆங்கிலமும் சீன மொழியிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயத்துடன் தொடர்புடைய புகைப்படமானது சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட பின்னரே, தான் இது தொடர்பில் அறிந்து கொண்டதாக இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

குறித்த அறிவிப்பு பலகையானது தான் பொதுமுகாமையாளராக வருவதற்கு முன்னரே பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த அறிவிப்பு பலகையை பொருத்தியதற்கான பொறுப்பு யாருடையது என்பது குறித்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .