2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ரவிராஜ் கொலை விவகாரம்: விசேட ஜுரி சபை விசாரிக்கும்

George   / 2016 ஒக்டோபர் 31 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் எழுவர் தொடர்பான வழக்கு, எதிர்வரும் 21ஆம் திகதி முதல், சிங்களம் பேசும் விஷேட ஜூரிகள் சபை முன்னிலையில், நாள்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, கொழும்பு மேல் நீதிமன்றம், திங்கட்கிழமை தீர்மானித்தது.

இந்த வழக்கு விசாரணை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மேற்கண்ட தீர்மானம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.  

குறித்த வழக்கை, சிங்களம் பேசும் விசேட ஜூரிகள் சபை முன்னிலையில் விசாரணைக்கு எடுக்குமாறு, பிரதிவாதிகளான கடற்படை அதிகாரிகள் மூவரும் கோரியிருந்தனர். இந்தக் கோரிக்கைக்கு, பாதிக்கப்பட்ட தரப்பினரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, சிங்களம் பேசும் விசேட ஜூரிகள் சபை முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, நீதிமன்றம் தீர்மானித்தது.  

இந்த கொலை வழக்கில் இரண்டு கடற்படையினர், ஒரு பொலிஸ் உத்தியோகத்தர், கருணா தரப்பை சேர்ந்த மூன்று பேர் என ஆறு பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், இவர்களில் கருணா அணியைச் சேர்ந்த மூன்று பேர், நீதிமன்றில் ஆஜராகாமல் புறக்கணித்து வந்தனர்.  

இவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் குற்றவியல் தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கை, விசேட ஜூரிகள் சபை முன் விசாரணை நடத்த முடியாது என, எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ், குற்றம் சுமத்தப்பட்டவர்களை விசேட ஜூரிகள் சபையில் முன் நிறுத்தி, விசாரணைகள் மேற்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டது.  

2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .