Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 21 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாப்புப் பணியாற் தொகுதியின் பிரதானி ரியர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை அடுத்தவாரம் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்போவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு விசாரணை நேற்றுமுன்தினம்(19) கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே குற்றப் புலானாய்வுப் பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர்.
குறித்த வழக்கு விசாரணையின் சந்தேக நபரான லெப்.கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி, மறைந்திருப்பதற்கு உதவினார் என்று அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றம்சாட்டுவதற்கு போதிய சான்றுகள் இருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.
அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாக, நீதிமன்றில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஒரு மாதத்துக்கு முன்னரே உறுதியளித்திருந்தனர். எனினும் அவர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .