2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ரஷ்ய தூதுவரை தாக்கியவரின் முன்பிணை மனு நிராகரிப்பு

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான ரஷ்ய தூதுவரொருவரை தாக்கிய சந்தேகநபரான மஞ்சு வீரக்கோனின் முன்பிணை மனுவை நிராகரித்துள்ளதுடன், அவரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான், திங்கட்கிழமை (14) உத்தவிட்டார். 

கொழும்பு, ஹைட் பார்க்கில் அமைந்துள்ள வாகனத் தரிப்பிடத்தில் கடந்த 4ஆம் திகதி, பி.எம்.டபிள்யூ ரக வாகனமொன்றில் வந்து, ரஷ்ய தூதுவரொருவரை கடுமையான வார்த்தைகளினால் திட்டி தாக்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபர், இரண்டு தனியார் நிறுவனங்களில் முகாமைத்துவ பணிப்பாளராக கடமையாற்றியவர் என்பதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் செயலாளர்களில் ஒருவர் ஆவார். 

இவரின் இத்தாக்குதல் காணொளிகள் சமூக வலையதளங்களில் வெளியாகி, சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து இச்சம்பவத்துக்காக இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மன்னிப்பு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .