2025 மே 01, வியாழக்கிழமை

ராகம வைத்தியசாலைக்கு அமைச்சர் விஜயம்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவில் பதிவான ராகம போதனா வைத்தியசாலைக்கு இன்று (04) விஜயம் செய்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கொரோனா சிகிச்சை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை அவதானித்தார்.

வைத்தியசாலையின் சில விடுதிகள் கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

வைத்தியசாலை பணிப்பாளருடன் கலந்தாலோசித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், தேவைப்பட்டால் இதற்காக மேலதிக விடுதிகளை ஒதுக்குமாறு அறிவுறுத்தியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஏனைய வைத்தியசாலைகளில் கொரோனா சிகிச்சை சேவைகள் தொடர்பாகவும் தான் அவதானிக்க இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .