2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ராதாகிருஷ்ணனை பிடிக்க உத்தரவு

Editorial   / 2025 செப்டெம்பர் 16 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலியில், 12 பேரை தாக்கி கொன்ற, 'ராதாகிருஷ்ணன்' என அழைக்கப்படும் காட்டு யானையை பிடிப்பதற்கு கூடலூர் வனத்துறையினருக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், சேரம்பாடி, பாடந்துறை, தேவர் சோலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப் பகுதிகளிலிருந்து வெளியேறும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தி வருகின்றன. அதுமட்டுமின்றி அப்பாவி மக்களை காட்டுயானை தாக்குகின்றன. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.

சமீபகாலமாக, கூடலூர் ஓவேலியில், 12 பேரை தாக்கி 'ராதாகிருஷ்ணன்' என அழைக்கப்படும் காட்டு யானை கொன்றுள்ளது. இந்த காட்டு யானையை பிடிக்க, முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா உத்தரவிட்டுள்ளார்.

அதற்கான நடவடிக்கையை கூடலூர் வனத்துறையினர் துவங்கியுள்ளனர். காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X