R.Maheshwary / 2021 மே 28 , பி.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கைதை அடிப்படையாக வைத்து, ரிஷாட் பதியுதீனினால் அவரது சட்டத்தரணி ஊடாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கானது, இன்று (28) உயர்நீதிமன்றால் முதற் தடவையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது .
நீதியரசர் ஜனக்த சில்வா, இந்த வழக்கிலிருந்து தான் விலகிக்கொள்வதாகவும், புதிய நீதியரசர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டது .
அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை, அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இவ் வழக்கு விசாரணையில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா, அனில் சில்வா, சிரேஷ்ட சட்டத்தரணிகளான என்.எம். சஹீட், ருஸ்தி ஹபீப் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் சட்டத்தரணியுமான அமீர் அலியும் ஆஜாராகினர். அத்துடன்,
சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி தவராசா வழிகாட்டலில் இந்த வழக்குத் தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த வழக்கிலிருந்து விலகிக்கொண்ட நீதியரசர் ஜனக்த சில்வா, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago