Editorial / 2025 ஒக்டோபர் 02 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியாயமான காரணங்கள் இன்றி, 2021 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை (02) அழைக்கப்பட்டது.
இதன்போது, மனுவை 2026 மார்ச் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதியரசர்கள் தீர்மானித்தனர். .
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்கக் கோரி அடிப்படை உரிமைகள் மனுவை முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்திருந்தார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago