2025 மே 07, புதன்கிழமை

ரீல்ஸ் வௌியிட்ட மனைவி பலி

Mayu   / 2024 ஜூலை 15 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிட்ட தனது மனைவியை கொன்று கழிவறையில் பதுக்கி வைத்திருந்த சம்பவமொன்று தெலுங்கானா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

தெலுங்கானா மாநிலம், உப்பல் பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் போலா. இவரது மனைவி மதுமிதா (வயது 24). இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை உள்ளது.

ஒடிசாவைச் சேர்ந்த பிரதீப் போலா, தெலுங்கானா மாநிலத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆர்வம் உள்ள மனைவி, இன்ஸ்டாகிராமில் 'ரீல்ஸ்' வீடியோ வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார். ஆனால், இது கணவருக்கு பிடிக்கவில்லை.

இதனால் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தக்கூடாது, 'ரீல்ஸ்' வீடியோ வெளியிடக்கூடாது என்று அவர் கண்டித்துள்ளார்.

ஆனால், மனைவி அவர் பேச்சை கேட்காமல் தொடர்ந்து 'ரீல்ஸ்' வெளியிட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவியின் தலையை கத்தியால் வெட்டி அவரது உடலையும்  துண்டுதுண்டாக வெட்டி ஒரு சாக்கு மூடையில் கட்டி குளியல் அறையில் வைத்து விட்டு தனது குழந்தையுடன் தலைமறைவாகி விட்டார்.

மேலும், குறித்த நபர்  ஹோட்டலுக்கு வேலைக்கு வராததால், அங்கிருந்த சக ஊழியர்கள் அவரை தேடி அவரது வீட்டுக்கு வந்துள்ளனர்.

அப்போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சாக்கு மூடையிலிருந்து மதுமிதாவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது,

அத்துடன், பெகும்பேட்டையில் தலைமறைவாக இருந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X